shadow

தேனி காட்டுத்தீயில் சிக்கிய கல்லூரி மாணவிகள்: மீட்புப்பணிக்கு உத்தரவிட்ட நிர்மலா சீதாராமன்

தேனி அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய கோவை மற்றும் ஈரோடு மாவட்ட கல்லூரி மாணவிகளில் 15 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி என்றா வனப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் மலையேறும் பயிற்சிக்கு சென்றனர். இந்த நிலையில் அங்கு திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் கல்லூரி மாணவிகள் பலர் சிக்கிக் கொண்டனர். மாணவிகளை மீட்க அருகிலுள்ள கிராம மக்களும், வனத்துறை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் காட்டுத்தீயில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க உதவுமாறு இந்திய விமானப்படைக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டதை அடுத்து காட்டுத்தீயில் சிக்கிய 15 மாணவிகள் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவர்களில் தீக்காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தீக்காயம் அடைந்து, மலைப் பகுதிகளில் தவித்து வரும் மாணவிகளை டோலி மூலம் மீட்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

Leave a Reply