15 நாட்கள் விடுமுறையை அறிவித்த அசோக் லேலேண்ட்: அதிர்ச்சியில் ஊழியர்கள்

15 நாட்கள் விடுமுறையை அறிவித்த அசோக் லேலேண்ட்: அதிர்ச்சியில் ஊழியர்கள்

வாகன உற்பத்தி துறை கடந்த சில மாதங்களாக மந்த நிலையில் இருந்து வரும் நிலையில் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்ட் நிறுவனம் ஏற்கனவே ஒரு சில நாட்கள் விடுமுறை அறிவித்து இருந்த நிலையில் தற்போது மேலும் 15 நாட்கள் வேலை இல்லாத நாட்களாக அறிவித்துள்ளது

அசோக் லேலேண்ட் நிறுவனம் மும்பை பங்கு சந்தை பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிவிப்பு ஒன்றில் அக்டோபர் மாதம் 2 முதல் 15 வரை உற்பத்தி நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அசோக் லேலண்ட் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை சுமார் 20 ஆயிரம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தாகவும், ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வெறும் 8000 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது என்றும், இதனையடுத்தே உற்பத்தியை குறைக்கும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது

 

Leave a Reply