149வது தைப்பூச திருவிழா: வடலூரில் ஜோதியை பார்க்க குவிந்த பக்தர்கள்

149வது தைப்பூச திருவிழாவையொட்டி வடலூரில் உள்ள வள்ளலார் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இன்று தைப்பூச திருவிழாவையொட்டி காலை 6 மணிக்கு 7 திரைகள் விலக்கப்பட்டு காண்பிக்கப்பட்ட ஜோதி தரிசனத்தை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் அவர் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தைப்பூசத்தையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் திரளான பக்தர்கள் அதிகாலையிலேயே வழிபாடு நடத்தினர். சென்னை வடபழனியில் உள்ள வடபழனி ஆண்டவர் திருக்கோவில் காலை 4 மணி முதலே பக்தர்கள் பால்குடம் எடுத்து நடந்து வந்து சாமி தரிசனம் செய்தனர்

Leave a Reply