தமிழகத்திலும் 144 தடை உத்தரவு: முதலமைச்சர் உத்தரவு

தமிழகத்திலும் 144 தடை உத்தரவு: முதலமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், இருப்பினும் மருந்து, காய்கறி, மளிகைக்கடைகள் செயல்பட எந்த தடையும் இல்லை என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

மேலும் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் நிறுவனங்கள் வீட்டில் இருந்தே ஊழியர்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் அலுவலகத்திற்கு வர முடியாத ஊழியர்களுக்கு சம்பளப்பிடித்தம் செய்யக்கூடாது என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தடை உத்தரவு காரணமாக பால், காய்கறி, மளிகை, இறைச்சி மற்றும் மீன் கடைகளைத் தவிர்த்த அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் இயங்காது என்றும், அத்தியாவசியத்துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர பிற அரசு அலுவலகங்கள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply