லிவிங் டுகெதர் கணவருக்கு 14 வயது மகளை விற்பனை செய்த பெண் கைது!

லிவிங் டுகெதர் கணவருக்கு 14 வயது மகளை விற்பனை செய்த பெண் கைது!

தன்னுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த நபர் ஒருவருக்கு தனது 14 வயது மகளை விற்பனை செய்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் லிவிங் டுகெதர் முறையில் வாலிபர் ஒருவருடன் வாழ்ந்து வந்தார்

இந்த நிலையில் தனது 14 வயது மகளை 3 லட்சம் ரூபாய்க்கு அந்த நபருக்கு விற்றுவிட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து 14 வயது சிறுமி அவர்களிடம் இருந்து தப்பித்து தனது தாயார் மீது காவல்துறையில் புகார் அளித்தார்.

இதனை அடுத்து அந்த சிறுமியின் தாயாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.