லிப்டில் சிக்கிய 14 பேர்கள்: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 14 பேர்கள் லிப்டில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 14 பேர்களில் ஒருவர் ஒன்றரை வயது குழந்தை என்பது குறிப்பிடதக்கது

லிப்ட் சென்று கொண்டிருந்தபோது திடீரென நடுவழியில் நின்றது அடுத்து லிப்டின் உள்ளே இருந்தவர்கள் அபயக்குரல் எழுப்பினார்கள். இதனை அடுத்து ரயில் நிலைய அதிகாரிகள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து தீயணைப்பு துறையினர் விரைவில் வந்து லிப்டை உடைத்து அதிலுள்ளவர்களை மீட்டனர்

சுமார் ஒன்றரை மணி நேரம் 14 பேர்கள் லிப்டில் உள்ளே சிக்கி இருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.