என்ன உள்குத்தோ?

சென்னை பெட்ரோல் விலையில் 14வது நாளாக மாற்றமில்லை என்றாலும் டீசல் விலையில் லேசான மாற்றம் ஏற்பட்டுள்ளது

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63ஆக விற்பனை ஆகி வருகிறது. டீசல் விலை 10 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.78.01 ஆக விற்பனை ஆகி வருகிறது

பீகார் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதால் பெட்ரோல் டீசல் விலையில் பெரிய மாற்றமில்லை என்றும், இந்த தேர்தல்கள் முடிந்தபின் மீண்டும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் சர்வதேச சந்தையிலும் கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply