14 வயது சிறுமியின் பாலியல் உறவுக்காக 310 மைல்கள் நடந்தே சென்ற வாலிபர்!

அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் என்ற பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் 14 வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொள்ள 310 மைல்கள் நடந்தே சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

இதுகுறித்து CNN வெளியிட்டுள்ள செய்தியின்படி டாம்மி லீ ஜென்கின்ஸ் என்ற வாலிபர் ஃபேஸ்புக்கில் 14 வயது சிறுமியுடன் நட்புடன் இருந்துள்ளார். சிறுமிக்கு அவ்வப்போது பாலியல் சம்பந்தமான புகைப்படங்களை அனுப்பிய டாம்மி, ஒரு கட்டத்தில் பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார்.

இதற்கு அந்த சிறுமி தன்னை பார்க்க தன்னுடைய இடத்திற்கு நடந்தே வந்தால் அவருடைய ஆசைக்கு சம்மதிப்பதாக கூறியதாகவும் இதனையடுத்து டாம்மி 350 மைல்கள் நடந்தே சென்றதாகவும் தெரிகிறது. இதற்காக அவர் எடுத்து கொண்ட நேரம் 108 மணி நேரங்கள்

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் டாம்மி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இந்த வழக்கு இம்மாத இறுதியில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது

Leave a Reply