‘சங்கத்தமிழன்’ படத்தின் முக்கிய பணி ஆரம்பம்

விஜய்சேதுபதி நடிப்பில் விஜய் சந்தர் இயக்கி முடித்துள்ள திரைப்படம் ‘சங்கத் தமிழன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. இதற்கான பூஜை சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் இன்று நடைபெற்றது.

இந்த பூஜையில் விஜய் சேதுபதி மற்றும் டெக்னீஷியன்கள் கலந்துகொண்டனர். இன்று முதல் இன்னும் ஒரு வாரம் விஜய்சேதுபதி தனது பகுதிக்கான டப்பிங் பணியை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பேத்ராஜ், சூரி, நாசர் நடித்துள்ளனர். விவேக் மெர்வின் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply