13 வயது சிறுமி மரணத்தில் திடீர் திருப்பம்:

தந்தையே கொலை செய்தாரா?

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் மந்திரவாதி பேச்சை கேட்டு சிறுமியை அவரது தந்தையே கொலை செய்ததாக வெளிவந்துள்ள தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகில் உள்ள நொடியூர் என்ற கிராமத்தில் சமீபத்தில் 13 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்

இந்த சிறுமியின் மர்ம மரணம் தொடர்பாக தற்போது அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளிவ்நதுள்ளது. இந்த சிறுமியை மந்திரவாதி பேச்சை கேட்டு அவரது தந்தையே கொலை செய்ததாகவும், இதனையடுத்து சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

நொடியூர் கிராமத்தில் 13 வயது சிறுமி மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.