இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த கர்ப்பிணி பெண்கள்: சாப்பாட்டிற்கே வழியில்லை என புலம்பல்

இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த கர்ப்பிணி பெண்கள்: சாப்பாட்டிற்கே வழியில்லை என புலம்பல்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு இதுவரை 42 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் 13 பேர் தமிழகத்தில் அகதிகளாக வந்துள்ளதை அடுத்து துவரை இலங்கையில் இருந்து 55 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்து உள்ளார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் இருந்து இரண்டு படகுகளில் தனுஷ்கோடி வந்த அவர்களை ராமேஸ்வரம் போலீசார் மீட்டு அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அகதிகளில் சிலர் கர்ப்பிணிகள் என்றும், இலங்கையில் சாப்பாட்டுக்கே வழியில்லை என அவர்கள் புலம்பியதாகவும் கூறப்படுகிறது.