மலேசியா விமான நிலையத்தில் தஞ்சமடைந்த 120 இந்திய மாணவிகள்: அதிர்ச்சி தகவல்

மலேசியா விமான நிலையத்தில் தஞ்சமடைந்த 120 இந்திய மாணவிகள்: அதிர்ச்சி தகவல்

பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வந்த 120 இந்திய மாணவிகளை அந்நாட்டு அரசு கோரோனா வைரஸ் பீதி காரணமாக நாடு திரும்ப உத்தரவிட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் மலேசியா வழியாக இந்தியா செல்ல திட்டமிட்டனர்

இன்று காலை மலேசியாவுக்கு அவர்கள் வந்த நிலையில் மலேசியாவில் இருந்து இந்தியா செல்லும் அனைத்து விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவர்கள் தற்போது கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே தங்கி இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் 120 மாணவிகளின் பெற்றோர்கள் உடனடியாக இந்திய வெளியுறவுத்துறை செயலகத்தை தொடர்பு கொண்டு 120 மாணவிகளை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்

கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் 120 மாணவிகளில் நெல்லை மாணவியும் ஒருவர் என்பதும் அவரது பெற்றோர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.