தமிழகத்தில் 12 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி? அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் 12 பேருக்கு ஒமிக்ரான் முந்தைய அறிகுறி இருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது

ஏற்கனவே ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர் சென்ற இடங்களில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் அவ்வாறு பரிசோதனை செய்ததில் 12 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ்க்கு முந்தைய அறிகுறி இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் கர்நாடகாவில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உள்பட மொத்தம் 5 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் நாடு முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது