shadow

மலேசியா நாட்டில் ஈப்போ நகரில் 18ஆவது சர்வதேச கராத்தே போட்டி கடந்த மே மாதம் 27ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்தியா உட்பட 7 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் தமிழ்நாட்டிலிருந்து ஆல் இந்தியா கராத்தே டோ கோஜு ரியு அசோசியேசன் சார்பில் 12 தங்கப் பதக்கம், 5 வெள்ளிப் பதக்கம், 5 வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.