2 மணி நேரத்தில் 13.8 சதவிகித வாக்குகள்: தமிழகத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

இன்று காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வாக்குப்பதிவு தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் 13.8% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது

சென்னையில் 10.58 சதவீதம் வாக்குகளும் அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 20 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளும் பதிவாகி உள்ளன. மேலும் கிருஷ்ணகிரியில் 13.3 8% வாக்குகளும், திருவள்ளூரில் 12.98% வாக்குகளும், காஞ்சிபுரத்தில் 14.80% வாக்குகளும், வேலூரில் 12.74% வாக்குகளும், பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.