12 ஆயிரம் குழந்தைகள் மரணம்: ஐநா அறிவிப்பால் அதிர்ச்சி

கடந்த சில ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், சிரியா, ஏமன் போன்ற நாடுகளில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்ததாக ஐநா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையால் உலகம் முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், சிரியா, ஏமன் நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக அரசுக்கும் தீவிரவாத அமைப்பிற்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்தப் போரினால் ஏராளமான பொதுமக்கள் மட்டுமின்றி அப்பாவி குழந்தைகளும் பலியாகியுள்ளது ஐநாவின் அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது

இந்த தாக்குதலில் சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்ததாகவும் பல குழந்தைகள் காயமடைந்ததாகவும் ஐநா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கைக்குப் பின்னராவது சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகள் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்

Leave a Reply