shadow

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு நேரம் குறைப்பு

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

12ஆம் வகுப்பு பாடங்களான இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட், வேதியியல், கணக்குப்பதிவியல், உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம், அலுவலக மேலாண்மை ஆகிய தேர்வுகளுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மொழி பாடங்களுக்கான தேர்வு மதியத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரம் குறைக்கப்பட்டுள்ளது மாணவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply