பாதுகாப்பான இடம் தாயின் கருவறை மட்டுமே: பாலியல் தொல்லையால் தற்கொலை செய்த மாணவியின் கடிதம்

’பாதுகாப்பான இடம் தாயின் கருவறையும் கல்லறையும் தான்’ என சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலைக்க்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

சென்னை பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் நேற்று தனது அறைக்குள் கதவு சாத்திக்கொண்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தற்கொலைக்கு முன் மாணவி எழுதியுள்ள கடிதத்தில் ’பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறையும் தான் என்றும் ஆசிரியர்களின் உறவை யாரும் நம்பவேண்டாம் என்றும் எழுதியுள்ளார்.