கேட் சாவி தொலைந்ததால் 113 விமான பயணிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்

கேட் சாவி தொலைந்ததால் 113 விமான பயணிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்

பெங்களூர் விமான நிலையத்தில் கேட் சாவி தொலைந்தால் 113 விமான பயணிகள் கடும் சிக்கல் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெங்களூர் விமான நிலையத்தில் காத்திருக்கும் அறையில் இருந்து விமானம் செல்லும் இடத்திற்கு செல்வதற்காக பயணிகள் தயாரான போது திடீரென கேட் சாவி தொலைந்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து அந்த சாவியை தேடும் பணியில் விமான நிலைய அதிகாரிகள் ஈடுபட்டதால் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் பயணிகள் இதற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது

இது குறித்து விசாரணை நடத்த விமான நிலைய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்