ஒரே நேரத்தில் பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதல். சீனாவில் பயங்கர விபத்து

ஒரே நேரத்தில் பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதல். சீனாவில் பயங்கர விபத்து

accidentசீனாவில் பாரம் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்று ஒரே நேரத்தில் பல வாகனங்களுடன் மோதியதால் ஏற்பட்ட பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும், காயம் அடைந்தவர்களில் பலர் உயிருக்கு போராடும் நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷங்டாங் மாகாணத்தில் உள்ள ஜிபோ என்ற நகரில் சமீபத்தில் அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றிவந்த டிராக்டர் வாகனம் ஒன்று திடீரென வாகன ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனா ல்அந்த டிராக்டர் அடுத்தடுத்து இரண்டு பேருந்துகள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்து குறித்து சீன போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குடிபோதையில் இருந்தாரா? என்பது குறித்தும் சோதனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.