11 ஆயிரம் பீர் பாட்டில்களை எலி குடித்துவிட்டதா? ஒரு அதிர்ச்சி தகவல்

11 ஆயிரம் பீர் பாட்டில்களை எலி குடித்துவிட்டதா? ஒரு அதிர்ச்சி தகவல்

பீகார் மாநிலத்தில் தற்போது மதுவிலக்கு அமலில் இருப்பதால் போலீசார் அவ்வப்போது ரெய்டு நடத்தி பிடிபடும் மதுபாட்டில்களை குடோனில் வைப்பது வழக்கம். இந்த நிலையில் இவ்வாறு வைக்கப்பட்டிருந்த 11 ஆயிரம் பீர் பாட்டில்களை எலி குடித்துவிட்டதாக குடோன் நிர்வாகம் கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதுகுறித்து பீகார் மாநிலத்தின், கைமூர் மாவட்டத்தின் நகர நிர்வாக அதிகாரி கல்பனா குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

”கடந்த 2 ஆண்டுகளாக பீகார் மாநில போலீஸார் பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்தி 11 ஆயிரம் பீர் கேன்களைப் பறிமுதல் செய்து போலீஸ் குடோனில் வைத்திருந்தார்கள். இந்தக் குடோன்களில் மொத்தம் 16 லட்சம் ஐஎம்எல் மதுவும், 9 லட்சம் லிட்டர் உள்நாட்டு மதுவும் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த பீர் கேன்களை இப்போது நீதிமன்றத்தில் ஒப்படைத்து, அழிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். அதற்காகக் கிட்டங்கியில் சென்று பீர் பாட்டில்களையும், கேன்களையும் பார்த்தால், பீர் அனைத்தும் மாயமாக இருக்கிறது.

அனைத்து பீர் கேன்களிலும், சிறிய துளைபோடப்பட்டுள்ளது. இந்த பீர் அனைத்தையும் எலிகள் குடித்திருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்”

Leave a Reply