ஜூன்1ல் 10ஆம் வகுப்பு தேர்வு நடைபெறுமா?

நீதிமன்ற வழக்கால் பரபரப்பு

தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த தேர்வுக்கான அட்டவணையையும் அவர் வெளியிட்டதால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு தற்போது தயாராகி வருகின்றனர்

இந்த நிலையில் சென்னை வழக்கறிஞர் ஒருவர் பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்

இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறவிருப்பதாகவும், இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த வழக்கின் முடிவுக்கு பின்னரே பத்தாம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடி ஜூன் 1ல் நடைபெறுமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும்

Leave a Reply