10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு

10ஆம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை?

10ஆம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 27ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தது என்பது தெரிந்ததே. ஆனால் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 10ஆம் வகுப்பு தேர்வு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதுவது கட்டாயம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த தேர்வு குறித்து புதிய தகவல் வெளிவந்துள்ளது

10ஆம் வகுப்பு தேர்வு ஜூன் மாத இறுதியில் நடத்துவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் இம்மாத இறுதியில் 10ஆம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே ஜூன் மூன்றாவது வாரத்தில் நடைபெறவிருக்கும் 10ஆம் வகுப்பு தேர்வுக்கு மாணவர்கள் தயாராக தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Leave a Reply