10ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தள்ளி வைப்பு: புதிய தேதி இதோ:

10ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தள்ளி வைப்பு: புதிய தேதி இதோ:

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், தற்போது பல நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனால் இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில் மார்ச் 31ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்போது ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதன்படி மார்ச் 27 தொடங்க இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்றும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.\

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தற்போது தேர்வூகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply