shadow

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

10tj resultசமீபத்தில் நடைபெற்று முடிந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 7ஆம் தேதி அல்லது மே 9ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகளின் தேதியை அதிகாரபூர்வமாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா நேற்று விடுத்துள்ள அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: “12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 7ஆம் தேதி காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதேபோல், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். பின் வரும் இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறாந்த தேதிகளை பதிவு செய்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதளங்கள்:

//dge.tn.nic.in
//dge1.tn.nic.in
//dge2.tn.nic.in
//dge3.tin.nic.in

Leave a Reply