shadow

பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இதனை காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்

முதல்முறையாக ஒரே நாளில் 2 தேர்வுகளின் முடிவுகள் அடுத்தடுத்து வெளியாகிறது.

தேர்வு முடிவுகளை மாணவர்களின் மொபைல் எண்களுக்கு அனுப்பவும், இணையதளங்களில் வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 9.30 மணிக்கு 12ம் வகுப்புக்கும், நண்பகல் 12 மணிக்கு 10ம் வகுப்புக்கும் முடிவுகள் வெளியாக உள்ளன