shadow

முகம்மது அலியின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானவர்கள் கண்ணீர் அஞ்சலி
mohammad ali
உலக அளவில் பிரபலமான குத்துச்சண்டை வீரர் முகமது அலி சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கான ‘ஜனாசா’ தொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

காசியஸ் மார்க்கெல்லஸ் கிளே என்ற இயற்பெயரை கொண்ட 74 வயது முகமது அலி தொழில்முறை குத்துச்சண்டை உலகில் முடிசூடா சக்கரவர்த்தியாக திகழந்தவர். 61 குத்துச்சண்டை களங்களை கண்ட அலி, வரிசையாக மூன்றுமுறை உலக சாம்பியன் பட்டங்களை பெற்றார். மேலும், 56 வெற்றிகளையும், வெறும் ஐந்து தோல்விகளையும் கண்ட அவர் உலகின் தனிப்பெரும் சாதனை வரலாற்றுக்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 30 ஆண்டுகளாக ‘பார்கின்சன் டிஸீஸ்’ எனப்படும் நடுக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்ட அலி, 1981-ம் ஆண்டுக்கு பின்னர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை. சமீபகாலமாக நுரையீரல் அழற்சி மற்றும் சிறுநீரகப்பாதை தொற்று உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்ட முகமது அலி, ஜூன் 4ஆம் தேதி மரணம் அடைந்தார். முகமது அலியின் உடல் கடந்த 6ஆம் தேதி அரிசோனா நகரில் இருந்து கென்ட்டுக்கி மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லி நகருக்கு தனி விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.

சவப்பெட்டியின் மீது தங்கநிற அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு நிற போர்வையால் மூடப்பட்டிருந்த அவரது உடலுக்கு கடந்த 3 நாட்களாக லட்சக்கணக்கான மக்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இறப்புக்கு பின்னர் தனது உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என குடும்பத்தாரிடம் முஹம்மது அலி தெரிவித்திருந்தார். அவரது விருப்பப்படியே இன்று இறுதிச்சடங்குகள் தொடங்கியது. கலிபோர்னியா நகரை சேர்ந்த சைத்தூன்யா கல்லூரியின் நிறுவனரான இமாம் சைத் ஷாகிர் தலைமையில் நடைபெற்ற ‘ஜனாசா’ தொழுகையில் சாதி, மதபேதங்களை கடந்த நிலையில் சுமார் 14 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply