1000 விபத்துக்கள் ஏற்பட்ட இடத்தில் பாலம் அல்லது சுரங்கப்பாதை: பாராளுமன்றத்தில் ஜோதிமணி எம்பி கோரிக்கை

கரூர் தொகுதியில் அதிகம் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படும் மண்மங்கலம் வாங்கப்பாளையம் செம்மடை பெரியார் வளைவு வீரராக்கியம்(கரூர்) ,கொடும்பாளூர் (விராலிமலை) பகுதிகளில் உடனடியாக மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கவேண்டும் என்று அப்பகுதி மக்களின் பல நாள் கோரிக்கை குறித்து இன்று மக்களவையில் கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி பேசினார்.

இதுகுறித்து ஜோதிமணி எம்பி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நேற்று பாராளுமன்றத்தில் எங்கள் கரூர் தொகுதியில் அதிகம் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படும் மண்மங்கலம் வாங்கப்பாளையம் செம்மடை பெரியார் வளைவு வீரராக்கியம்(கரூர்) ,கொடும்பாளூர் (விராலிமலை) பகுதிகளில் உடனடியாக மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்

ஜோதிமணி எம்பியின் கோரிக்கையை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உடனடியாக நிறைவேற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply