1000 மடங்கு உறுதியாக கூறுகின்றேன், இதுதான் நடக்கும்: சந்திரபாபு நாயுடு

ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சிதான் வெற்றி பெறும் என்பதில் 1000 மடங்கு உறுதியாக இருக்கிறேன் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆந்திராவில் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்றும், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து கருத்து கூறிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, எனக்கு 0.1% கூட சந்தேகம் இல்லை. இந்த ஆட்சி தொடரும். மீண்டும் ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சிதான் வெற்றி பெறும் என்பதில் 1000 மடங்கு உறுதியாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

Leave a Reply