1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்! புத்தாண்டு கொண்டாட சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்

1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்! புத்தாண்டு கொண்டாட சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்

கொடைக்கானலில் கேரள இளைஞர்கள் பயணித்த கார் ஒன்று 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததால் ஒருவர் பலியானார். 4 பேர்களின் உயிர் ஊசலாடி வருகிறது.

புத்தாண்டு கொண்டாட இளைஞர்கள் சிலர் கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். கொடைக்கானல் மலையில் கார் ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை உடைத்து கொண்டு 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தை நேரில் கண்ட சிலர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் உடனடியாக காவல்துறையினர்களும் மீட்புப்படையினர்களும் சம்பவ இடத்திற்கு வந்து அந்தரத்தில் தொங்கிய காரில் இருந்து படுகாயமுற்ற 4 பேர்களை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். காரை ஓட்டி வந்த டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியாகிய நிலையில் சிகிச்சை பெற்று வரும் ஒருசிலரின் உயிர்களும் ஊசலாடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

 

Leave a Reply