shadow

வங்கியில் இருந்து ரூ.2 லட்சம் பணம் எடுத்தால்ரூ.2 லட்சம் அபராதம்.

கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்த உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் முழுக்க முழுக்க டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மத்திய அரசு ஊக்கம் கொடுத்து வருகிறது. ரொக்கமாக அதிகளவு பணம் எடுப்பதை அனுமதிக்க கூடாது என்பதே மத்திய அரசின் கொள்கையாக இருந்தது

இந்த நிலையில் இனி வங்கிக் கணக்கிலிருந்து 2 லட்ச ரூபாய் ரொக்கமாக எடுத்தால்,100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் அதாவ்து ரூ.2 லட்சம் பணம் எடுத்தால் ரூ.2 லட்சம் அபராதம் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த விதிமுறையானது, தனி நபர் தனது சொந்த செலவுகளுக்காக பணம் எடுக்கப்படும் போது மட்டுமே பொருந்தும் என்றும் அரசு, நிதி நிறுவனம், தபால் நிலைய சேமிப்புக் கணக்கு அல்லது கூட்டுறவு வங்கி ஆகியவற்றிடம் இருந்து பெறப்படும் தொகைக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் வருமானவரித்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply