திரையரங்கு, பேருந்துகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கிலும் படிப்படியாக தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் தற்போது கூடுதல் தளர்வுகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதன்படி திரையரங்குகளில் இதுவரை 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் இனி 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

அதேபோல் பேருந்துகளில் இதுவரை 50 சதவீத பணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இனி 100 சதவீத பயணிகள் அனுமதிக்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்

மேலும் உணவகங்கள் மற்றும் கடைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு அகற்றப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மீண்டும் இயல்பு நிலை திரும்பி விட்டதாகவே கருதப்படுகிறது.