வெங்காய விலை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் என்றிருந்த நிலையில் திடீரென தற்போது 80 முதல் 100 ரூபாய் வரை கடைகளில் விற்பனை செய்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதாகவும் இன்று முதல் கோயம்பேடு மார்க்கெட்டில் ரூபாய் 45க்கு ஒரு கிலோ வெங்காயம் கிடைக்கும் என்றும் அரசு கூறியிருந்தாலும் இன்னும் சில்லறை கடைகளில் 75 முதல் 90 ரூபாய் வரை வெங்காயம் விற்பனை ஆகிக் கொண்டு இருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வருமானம் இல்லாமல் இருக்கும் நிலையில் வெங்காய விலை திடீரென இரு மடங்கு உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply