100% பக்தியுடன் இருந்தால் அந்தக்குடும்பத்துக்கே உயர்வு சேரும்: துர்கா ஸ்டாலின் குறித்து எஸ்வி சேகர்

ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறார் என்றும் ஒரு குடும்பத்தில் ஒருவர் 100% பக்தியுடன் இருந்தால் அந்த குடும்பத்திற்கு உயர்வு சேரும் என்றும் துர்கா ஸ்டாலின் குறித்து நடிகர் எஸ்வி சேகர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

தமிழக முதல்வரை முதல்வராக இன்று மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து துர்கா ஸ்டாலின் மிகவும் நிகழ்ச்சியுடன் கண்ணீர் சிந்திய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து எஸ்வி சேகர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்பதை நிரூபித்தவர் திருமதி துர்காஸ்டாலின். ஒரு குடும்பத்தில் ஒருவர் 100% பக்தியுடன் இருந்தால் அந்தக்குடும்பத்துக்கே உயர்வு சேரும் என வெற்றியை கொண்டு சேர்த்த துர்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆசிகள்.

Leave a Reply