தினசரி கூடுதலாக 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுக்கள்: திருப்பதி தேவஸ்தானம்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தற்போது இலவச டிக்கெட்டுகள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வரும் நிலையில் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் கூடுதலாக 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி திருமலை திருப்பதியில் மூன்று இடங்களில் இலவச டிக்கெட் கவுண்டர்களில் வெளியாகும் செய்யப்படும் என்றும் இந்த இடங்கள் குறித்த அறிவிப்பை திருமலையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்பு அனைத்து பக்தர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.