10 பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனாவா?

 அதிர்ச்சி தகவல்

நேற்று முன் தினம் மூன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கும், நேற்று 7 வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் இன்று 10 வீரர்களுக்கு கொரோனா தொற்று
உறுதியாகியுள்ளதாம்

இங்கிலாந்து நாட்டிற்கு சென்று மூன்று டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருந்த பாகிஸ்தான் அணி, 10 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு என்றதும் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டது

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வரும் வரை எந்த தொடரில் விளையாடாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு: ஃபாக்கர் ஜாமான், இம்ரான்கான், காசிப் ஃபாட்டி, முகமது ஹசீப், முகமது ஹஸ்னைன், முகம்து ரிஸ்வான், வாஹப் ரியாஸ், ஹெய்டர் அலி, ஹரிஸ் ராவ், ஷதப் கான் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.