அரசு பள்ளியில் 10 அடி பள்ளம்: மாணவர்கள் கதி என்ன?

திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளியில் திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அந்த பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

கனமழை காரணமாக விடுமுறைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீரென 10 அடி ஆழத்தில் பள்ளம் தோன்றியது

இதனால் மாணவர்கள் பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர். இதனை அடுத்து நிலையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மூன்று மாடி கொண்ட கட்டிடத்தில் திடீரென அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.