10 ஆயிரம் ஊழியர்களை நீக்க பார்லே பிஸ்கட் நிறுவனம் முடிவு!

பிரபல பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பார்லே, பொருளாதார நெருக்கடி காரணமாக 10 ஆயிரம் ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிஸ்கட்டுகளுக்கான வரி 12 சதவீதம் இருந்த நிலையில் ஜிஎஸ்டியில் 18 சதவீதம் அதிகரித்ததே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி உயர்வால், பிஸ்கெட்டுகளின் விலையை உயர்த்தவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதன் காரணமாக தங்கள் பிஸ்கெட்டுகளின் விற்பனை குறைந்துள்ளதாகவும் பார்லே நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரிய நிறுவனங்கள் இதுபோன்ற முடிவை எடுப்பது அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சமீபத்தில் இதேபோன்ற பொருளாதார நெருக்கடியை பிரபல பிஸ்கெட் நிறுவனமான பிரிட்டானியாவும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது

Leave a Reply