shadow

10 வருட அரசியலில் முதல் வெற்றியை ருசித்த நாம் தமிழர் கட்சி!

கடந்த 2009ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த நடிகரும் இயக்குனருமான சீமான், இந்த பத்து வருடங்களில் பல தேர்தல்களில் போட்டியிட்டும் இதுவரை டெபாசிட்டை கூட பெற்றதில்லை.

இந்த நிலையில் முதல்முறையாக ஒரு கவுன்சிலர் பதவி இக்கட்சிக்கு கிடைத்துள்ளது. தேர்தல் அரசியலில் நாம் தமிழர் கட்சி, முதல் வெற்றிய அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக நாம் தமிழர் கட்சியின் சுனில் வெற்றி பெற்றதன் மூலம் தேர்தல் வெற்றியை நாம் தமிழர் கட்சி எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *