10 வயது மகனை கருணைக்கொலை செய்ய ஜனாதிபதியிடம் அனுமதி கேட்ட தாய்

10 வயது மகனை கருணைக்கொலை செய்ய ஜனாதிபதியிடம் அனுமதி கேட்ட தாய்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் வாழும் ஒரு பெண்ணின் 10 வயது சிறுவன் புற்றுநோயால் கடந்த சில மாதங்களாக அவதியுற்று வருகிறார். ஏழ்மை நிலையில் உள்ள அந்த தாயாரால் மகனின் சிகிச்சை செலவை செய்ய முடியவில்லை.

தனது கண் எதிரே மகன் புற்றுநோயால் துடித்து கொண்டிருப்பதை பார்க்க சகிக்க முடியவில்லை என்றும், இதனால் தனது மகனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த தாய் குடியரசு தலைவர் கோவிந்த் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் குடியரசு தலைவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் சிறுவனின் சிகிச்சைக்கு உதவி செய்ய தயார் என்றும், அந்த பெண்ணின் விபரங்கள் வேண்டும் என்றும் டுவிட்டரில் பலர் பதிவு செய்துள்ளனர்,.

Leave a Reply