10 ரூபாய் கொரோனா டாக்டர்: மக்கள் ஆச்சரியம்!

கொரோனா வைரஸ் பாதிப்புகாக ஆயிரக்கணக்கில் ஏன் லட்சக்கணக்கில் கட்டணம் பெற்று வரும் தனியார் மருத்துவமனைகளுக்கு இடையே 10 ரூபாய்க்கு கொரோனா ஆலோசனையை டாக்டர் ஒருவர் வழங்கி வருகிறார்

ஹைதராபாத்தை சேர்ந்த விக்டர் இம்மானுவேல் என்ற டாக்டர் கொரோனா பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு 10 ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு அதற்கான ஆலோசனைகளையும் மருந்துகளையும் பரிந்துரை செய்து வருகிறார்

இவருடைய சேவைக்கு அந்த பகுதியில் உள்ளவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் மேலும் ஏழை எளியவர்கள் ஆக இருந்தால் அந்த பத்து ரூபாயும் அவர் வாங்காமல் இலவசமாகவே ஆலோசனை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது