10 நாட்கள் கழித்து சாவகாசமாக ரஜினியை விமர்சனம் செய்யும் பிரேமலதா!

10 நாட்கள் கழித்து சாவகாசமாக ரஜினியை விமர்சனம் செய்யும் பிரேமலதா!

பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியதை சர்ச்சையாக்கி அதிமுக, திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அவரை கடுமையாக விமர்சனம் செய்து முடித்துவிட்டனர்

நேற்று இது குறித்த வழக்கும் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே இத்துடன் இந்த பிரச்சனை முடிந்து விட்டதாக பொதுமக்கள் கருதிய நிலையில் திடீரென தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ரஜினி-பெரியார் பிரச்சினை குறித்து கூறியதாவது:ரஜினி வெறும் அம்புதான் என்றும் அவருக்குப் பின்னால் இருந்து இயக்குவது யாரோ இருக்கிறார்கள் என்றும் கூறிய பிரேமலதா பெரியார் யார் என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல உலகிற்கே தெரியும் என்றும் துக்ளக் விழாவில் துக்ளக் குறித்து மட்டும் ரஜினி பேசியிருந்தால் எந்த பிரச்சனையும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்

கடந்த 10 நாட்களுக்கு மேல் இந்த விஷயம் பரபரப்பாக இருந்த நிலையில் அமைதியாக இருந்துவிட்டு திடீரென இப்போது யோசித்து சாவகாசமாக பிரேமலதா, ரஜினியை விமர்சனம் செய்வது ஏன்? என அவரது கட்சி தொண்டர்களே கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply