10 டன் ஆக்சிஜன் சிலிண்டர் இலவசமாக கொடுத்து உதவிய நடிகர்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆக்சிஜன் சிலிண்டர் அனைத்து மருத்துவமனைகளிலும் பற்றாக்குறையாக உள்ளது.

இந்த நிலையில் பிரபல நடிகர் ஒருவர் 10 டன் ஆக்சிஜன் சிலிண்டரை இலவசமாக கொடுத்து உதவியுள்ளார்

இன்று இந்தூர் அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்தது

இதனையடுத்து உடனடியாக அந்த மருத்துவமனைக்கு 10 டன் ஆக்சிஜன் சிலிண்டரை நடிகர் சோனு சூட் அனுப்பி உள்ளார். மேலும் வேறு எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள் செய்து தருகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.