10 கிமீ நோயாளியை சுமந்து வந்த டாக்டர்

10 கிமீ நோயாளியை சுமந்து வந்த டாக்டர்

டாக்டர் என்றாலே நோயாளிகளிடம் கெத்து காட்டுபவர் என்றுதான் பலர் நினைத்திருப்பார்கள். ஆனால் ஒரு நோயாளியை பத்து கிலோ மீட்டர் சுமந்து வந்த டாக்டர் குறித்த செய்தி வெளிவந்துள்ளது

ஒடிஷாவை சேர்ந்த டாக்டர் ஓம்கார் ஹோட்டா என்பவர் ஒரு பழங்குடியின பெண்ணுக்கு பிரசவம் பார்க்க சென்றுள்ளார். குழந்தை பிறந்த பின்னரும் அந்த பெண்ணுக்கு ரத்தம் வெளியேறி கொண்டிருந்ததால் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

உடனே சற்றும் யோசிக்காமல் அந்த நோயாளியை அவரது உறவினர் துணையுடன் கட்டிலோடு சுமந்து 10 கிலோ மீட்ட்டர் நடந்து சென்று மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளார் அந்த டாக்டர். அவருக்கு ஒரு சல்யூட் அடிப்போமா!

Leave a Reply