10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அரசு உத்தரவு: அதிர்ச்சி தகவல்

ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டில் உள்ள பத்தாயிரம் ஓட்டங்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒட்டகங்களை துப்பாக்கி சுடும் வீரர்கள் இன்று முதல் கொலை செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், ஒட்டகங்கள் அதிக அளவு தண்ணீரை குடிப்பதால் மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் தண்ணீர் கிடைப்பது அரிதாக இருப்பதாகவும் அரசு முடிவு செய்து உள்ளது

இதனை அடுத்து அங்கு உள்ள லட்சக்கணக்கான ஒட்டகங்களில் பத்தாயிரம் ஓட்டங்களை மட்டும் சுட்டுக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிந்து வருவதால் இலட்சக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழந்த நிலையில் தற்போது ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல வேண்டுமா என அந்நாட்டில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

இருப்பினும் ஒட்டகங்களின் கழிவூகளால் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வெளியாகி சுற்றுச் ஊழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் தண்ணீர் பற்றாக்குறை ஒட்டகங்களினால் ஏற்படுவதாகவும் இதன் காரணமாக ஒட்டகங்களை கொலை செய்ய அரசு முடிவு செய்திருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Leave a Reply