10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லை: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு 35 மதிப்பெண்கள் வழங்கப் பட உள்ள நிலையில் அதிக மதிப்பெண் தேவைப்படுபவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதலாம் என செய்திகள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் அளவில் எந்த தேர்வுகளும் நடத்தப்படாது என்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளது

இதுபோன்ற தகவலை வெளியிட்டு மாணவர்களை குழப்ப வேண்டாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது

Leave a Reply