10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது: அரசு அறிவிப்பு

கேரளாவில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக கேரள மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி அவர்கள் தெரிவித்துள்ளார்

கடந்த ஏப்ரல் மாதம் கேரளாவில் பத்தாம் வகுப்பு தேர்வு பாதுகாப்பாக நடைபெற்றது. இதனை அடுத்து தேர்வுத்தாள் திருத்தும் பணியில் கடந்த சில வாரங்களாக ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை மாணவர்கள் இணையதளங்கள் மூலம் பார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4.12 லட்சம் மாணவ மாணவிகள் இன்று தேர்வு எழுதி உள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது