shadow

1 சதவீத பணக்கார இந்தியர்களிடம் நாட்டின் 58 சதவீத சொத்து!

இந்தியாவில் வசிக்கும் ஒரு சதவீத பணக்காரர்களிடம் நாட்டின் 58 சதவீத சொத்து இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. இதுவே உலகளவில் 50 சதவீதமாக இருக்கிறது.

பில்லியனர்கள் சொத்து மதிப்பு

சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள பில்லியனர்கள் மற்றும் அவர்களின் சொத்து மதிப்பு தொடர்பாக ஆக்ஸ்போம் (Oxfam) நிறுவனம் ஆய்வு நடத்தியது, இதைத்தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் டேவோஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில், ஆக்ஸ்போம் நிறுவனம் ‘An economy for the 99%’ என்ற தலைப்பில் ஒரு புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. அதில், உலகின் பொருளாதார வளர்ச்சி என்பது உலகில் உள்ள 8 நபர்களை பொறுத்தது எனவும், இவர்களிடம் உள்ள செல்வத்தின் அளவானது நாட்டில் உள்ள 50% மக்களின் செல்வத்திற்கு ஒப்பானது எனவும் தெரிவித்துள்ளது.

இதே ஆக்ஸ்போம் நிறுவனம் கடந்த 2016 ஜனவரியிலும் தனது ஆய்வறிக்கையினை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில் 2010 ஆண்டுடன் ஒப்பிட்டு, சர்வதேச அளவில் 62 பில்லியனர்களின் சொத்துமதிப்பு 44 சதவீதம் அதிகரித்திருந்ததாகவும், அதே காலகட்டத்தில் ஏழைகளின் சொத்துமதிப்பு 41 சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும், சர்வதேச அளவில் உள்ள மக்களின் சொத்துக்களின் பாதியளவு, 62 பேரிடம் மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

Oxfam அறிக்கையின்படி, இந்தியாவில் வசிக்கும் 84 பில்லியனர்கள் கையில் 248 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கிறதாம். இதில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 19.3 பில்லியன் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறார். சன் பாராமெடிக்கல்ஸ் அதிபர் திலிப் சங்வி 16.7 பில்லியன் சொத்து மதிப்பு வைத்திருக்கிறார். விப்ரோ நிறுவனர் ஆஷிம் பிரேம்ஜி 15 பில்லியன் டாலர் சொத்து சேர்த்துள்ளார். இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பு 3.1 டிரில்லியன் ஆகும்.

கடந்த 30 ஆண்டுகளில் உலகின் செல்வந்தர்களும் பெருநிறுவனங்களும் ஒன்று சேர்ந்து உலக பொருளாதாரத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டனர். அரசியல் செல்வாக்கும் இவர்களுக்கு பரிபூரணமாக கிடைக்கிறது. உலகின் பொருளாதார வளர்ச்சியின் பயன் சமூகத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே சென்று சேர்கிறது, அதே வேளையில் ஏழைகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவுமே காணப்படவில்லை. செல்வந்தர்களை மென்மேலும் செல்வந்தர்கள் ஆகியிருக்கிறார்கள், ஏழ்மையை அதிகரித்திருக்கிறது.

இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள உலகின் பொருளாதாரத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள பில்லினியர்களின் பட்டியல் இதோ :

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் – 75 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

ஸ்பானிஷ் சில்லறை அதிபர் ஒர்டேக(amancio ortega) – 67 பில்லியன்

அமெரிக்க முதலீட்டாளர் வாரன் – 60.8 பில்லியன்

மெக்சிகன் முதலீட்டாளர் கார்லோஸ் ஸ்லிம் Helu – 50 பில்லியன்

Amazon.com நிறுவனர் jeff Bezos – 45.2 பில்லியன்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் – 44.6 பில்லியன்

ஆரக்கிள் நிறுவனர் லேரி எலிசன் – 43.6 பில்லியன்

அமெரிக்க தொழிலதிபர் மைக்கேல் ப்ளூம்பெர்க் – 40 பில்லியன்.

ரஷ்யாவின் 74.5% பொருளாதார வளர்ச்சியினை, 1% மட்டுமே உள்ள ரஷ்ய செல்வந்தர்கள் ஆதிக்கம் செலுத்தி ரஷ்ய பொருளதாரத்தை கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். அமெரிக்காவின் பொருளாதாரம் 42.1% அமெரிக்க செல்வந்தர்களைச் சார்ந்து இருக்கிறது. உலக பொருளாதாரத்தின் 50.8% சதவீதம் உலக செல்வந்தர்களிடம் இருக்கிறது.

Leave a Reply