shadow

ிரதமருக்கு மீண்டும் கருப்புக்கொடு காட்டுவோம்: வைகோவின் எச்சரிக்கை ஏன்?

கஜா புயல் பாதிப்புக்காக மத்திய அரசு நிவாரண நிதியாக ரூ.25 ஆயிரம் கோடி வழங்காிட்டால் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கஜா புயலினால் டெல்டா மாவட்டங்கள் பெரும் சேதங்களை சந்தித்துள்ள நிலையில் நிவாரண பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இன்னும் உள்புறமுள்ள ஒருசில கிராமங்களுக்கு எந்தவித நிவாரண உதவியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ25 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், இல்லையேல் பிரதமர் மோடி தமிழகம் வரும்போது கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்திற்கு தலா ரூ50 ஆயிரம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு தென்னை பண்ணைகளில் இருந்து, விவசாயிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

Leave a Reply