ஹர்திக் பட்டேலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை: தேர்தலில் போட்டியிட முடியுமா?

குஜராத் மாநிலத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு நடத்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக ஹர்திக் பட்டேல் மீது வழக்குப்பதிவு செய்து வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது ஹர்திக் பட்டேலுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

ஹர்திக் பட்டேல் சமீபத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறார். இதனையடுத்து தேர்தலில் போட்டியிட வசதியாக 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஹர்திக் பட்டேல் மனுதாக்கல் செய்திருந்தார்

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘ ஹர்திக் பட்டேலின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. ஹர்திக் பட்டேல் மனுவை உடனே விசாரிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply